முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

0 3189

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என டெல்லி  மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா சிகிச்சை நோயாளிளை சில தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை என்றும் காலியாக உள்ள படுக்கை வசதிகளை அந்த மருத்துவமனைகளை மறைப்பதாகவும் கெஜ்ரிவால் நேற்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

அதே போன்று கொரோனா சோதனைகளுக்கு நபர்களை பதிவு செய்வதில் அரசின் விதிமுறைகளை மீறியதாக பிரபல சர் கங்காராம் மருத்துவமனைமீது எஃப்ஐ ஆர் போடப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களாக, உயிரையும் பணயம் வைத்து மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை அளிப்பதை மறந்து விட்டு கெஜ்ரிவால் செயல்படுவதாக டெல்லி மருத்துவர்கள் சங்கம் கூறி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments