கட்சிக்கார பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் .. வசமாக சிக்கிய வக்கீல் !

0 13737

ராமநாதபுரம் அருகே இடத்தகராறு தொடர்பாக வழக்கு கொடுக்க வந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக வழக்கறிஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், தனது பக்கத்து வீட்டுக்காரர்களுக்குடன் ஏற்பட்ட இடத்தகராறு தொடர்பாக பரமக்குடி வழக்கறிஞர் அரவிந்தன் என்பவரை சந்தித்து உள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அடிக்கடி அந்த பெண்ணை தொடர்பு கொண்ட வழக்கறிஞர் அரவிந்தன் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார் .

கட்டணமாக குறிப்பிட்ட அளவு பணமும் பெற்றுக்கொண்டு அரவிந்தன் இந்த சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக பேச வேண்டும் என்று தனது கட்சிக்கார பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார் அரவிந்தன். அவரது வீட்டில் அந்த பெண்ணை தவிர வேறுயாரும் இல்லை என்பதை அறிந்த அவர் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் வழக்கை எதிரிக்கு சாதாரணமாக முடித்து விடுவேன் என்று கூறி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்போது அந்த பெண்ணுடன் ஒன்றாக இருப்பதை அரவிந்தன் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

ஒன்றாக இருந்த போது எடுத்த புகைப்படத்தை அந்தப்பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி அந்த பெண்ணின் தங்கை அழைத்து வரச்சொல்லி மிரட்டியுள்ளார்.

தங்கையை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைக்கா விட்டால் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று கடுமையாக மிரட்டியுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையை வீணாக்கியதோடு, தனது தங்கையின் வாழ்க்கையையும் சீரழிக்க திட்டமிட்டு மிரட்டி வரும் வழக்கறிஞர் அரவிந்தன் மீது மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்தார்

இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் , வழக்கறிஞர் அரவிந்தன் மீது பலாத்கார வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைபடங்கள் கைப்பற்றப்பட்டது.

அரவிந்தனை பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். 

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்,அறிமுகமான நபராக இருந்தாலும் அவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் எந்த ஒரு நபரும் ஆபாச படத்தை காட்டி மிரட்ட தொடங்கினால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை உறுதி என்பதற்கு இந்த சம்பவமே சான்று .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments