கொரோனா அசுர வேக பாய்ச்சல் உச்சம் தொட்ட தமிழகம்

0 8186

தமிழகத்தில் கொரோனா, அசுர வேகத்தில் பாய்ச்சல் காட்டினாலும், சுமார் 17 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். ஒரே நாளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப் பட்டதால், இந்த எண்ணிக்கை விரைவில் 6 லட்சத்தை எட்டும் சூழல் உருவாகி உள்ளது. 

உலகை உலுக்கும் கொரோனாவின் பாதிப்பு, தமிழகத்திலும் வேகம் எடுத்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 515 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 4 பேரும், குவைத்தில் இருந்து திரும்பிய 3 பேரும் அடங்குவர்.

மஹாராஷ் டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய11 பேர் உள்பட மொத்தம் 18 பேர், கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 600 - ஐ தாண்டி விட்டது. தமிழகத்தில் சுமார் 14 ஆயிரத்து 396 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஓரே நாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனா வின் பிடியில் இருந்து இதுவரை சுமார்17 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 970 - ஐ எட்டி உள்ளது.

தமிழகத்தில், ஒரே நாளில் 18 பேர் வைரஸ் தொற்றுக்கு இரை ஆனார்கள். இவர்களில் 20 வயது இளம்பெண் ஒருவர், வேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

2 பெண்கள் உள்பட 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும் மரணம் அடைந்தனர். எனவே, கொரோனா உயிர்ப்பலி, தமிழகத்தில் 269 ஆக உயர்ந்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை, 825 சிறுமிகள் உள்பட சுமார் ஆயிரத்து 700 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 26 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆயிரத்து 251 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 337 பேர், கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில், ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது, 8 - வது நாளாக நீடித்தது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மட்டும் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments