உலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது

0 1643

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 19 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதேபோல் அமெரிக்காவில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் 6 லட்சத்து 70 ஆயிரத்தையும், ரஷ்யாவில் 4 லட்சத்து 60 ஆயிரத்தையும் கொரோனா பாதிப்பு கடந்துள்ளது.

ஸ்பெயின், பிரிட்டனில் கொரோனா பாதிப்பு தலா 2 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  இதுபோல மேலும் பல நாடுகளிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் உலகில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் மருத்துவ சிகிச்சையில் குணமானோரின் எண்ணிக்கையும் 34 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments