சிகிச்சை கட்டணத்தை செலுத்தாதால் 80 வயது முதியவரை கட்டிலில் கட்டிப் போட்ட மருத்துவமனை

0 11839

சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த இயலாத 80 வயது முதியவரை மருத்துவமனை நிர்வாகம் படுக்கையில் கட்டிப் போட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஷாஜாபூர் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் வயிற்று வலிக்காக சேர்க்கப்பட்ட இந்த முதியவரின் சிகிச்சைக் கட்டணத்தை அவரது குடும்பத்தினர் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

முதியவர் தப்பிச் சென்று விடக்கூடாது என்ற நோக்கில் மனிதாபிமானமற்ற முறையில் மருத்துவமனை நிர்வாகம் இப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments