மனைவி, பிள்ளைகள் மீது தீவைப்பு கொடூரனுக்கு போலீஸ் வலைவீச்சு

0 1524

சென்னை மதுரவாயலில் மனைவி, மகன், மகள் ஆகியோரைத் தீவைத்துக் கொளுத்தியவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

மதுரவாயல் அருகே உள்ள புளியம்பேட்டைச் சேர்ந்தவர் மக்புல் அலி. இவர் மனைவி கொரோசா பேகம். மக்புல் அலி 4 ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தாவில் கொரோசா பேகத்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதன்பின் கொரோசா பேகத்துடன் அவரின் முதல் கணவருக்குப் பிறந்த மகன், மகளையும் அழைத்து வந்து மதுரவாயலில் குடியிருந்து வந்தனர்.

கணவன் மனைவி மகன் ஆகிய மூவரும் வேலப்பன்சாவடியில் உள்ள காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். ஊரடங்கால் தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில் அடிக்கடி குடித்து விட்டு வந்த மக்புல் அலி, மனைவி மீது சந்தேகமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கொரோசா பேகம் அவரைக் கடந்த 2 மாதங்களாக வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த மக்புல் அலி ஞாயிறு அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன், மகள் ஆகிய மூவரின் மீதும் தின்னர் என்ற எரிபொருளை ஊற்றித் தீவைத்து விட்டுத் தப்பியோடிவிட்டான்.

மூவரின் அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து அவர்களைக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தாய், மகனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த மதுரவாயல் காவல்துறையினர் தப்பியோடிய மக்புல் அலியைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments