தமிழகத்தில் நாளை வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாது என தகவல்
நாடு முழுவதும் நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நோய்த் தொற்று குறையாததால் தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுகள் அமலானதை அடுத்து, வழிபாட்டு தலங்களையும் திறப்பது குறித்து கடந்த 3ம் தேதி அனைத்து சமயத் தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்து, அனுப்ப வேண்டி உள்ளது. இதனால் மத்திய அரசு அனுமதி வழங்கியும், தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாது என கூறப்படுகிறது.
மேலும் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான முடிவை ஒரு வாரம் தள்ளி வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments