கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொத்தவால் சாவடி, யானைகவுனி உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு
சென்னை ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கொத்தவால் சாவடி, யானைகவுனி, ஏழு கிணறு பகுதிகளில் அடுத்த ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கை கடைபிடிக்கும் வகையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
மிகவும் குறுகலான தெருக்கள், நெருக்கமான வீடுகள் அமைந்துள்ள இப்பகுதியில் தொற்று பரவல் வேகமும் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று சங்கிலியை உடைக்கும் நோக்கில், அப்பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கடைகளை அடைப்பதாக வியாபாரிகள் அறிவித்தனர். இதையடுத்து இன்று முதல் அடைக்கப்பட்டுள்ள கடைகள் வரும் 14ம் தேதி வரை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொத்தவால் சாவடி, யானைகவுனி, ஏழு கிணறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கும் வகையில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே மே 19 முதல் 24 வரை மூடப்பட்ட கொத்தவால்சாவடி சந்தை, மே 25 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுபடுத்த கொத்தவால் சாவடி, யானைகவுனி உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு #Chennai | #CoronaVirus https://t.co/mys9yF6dPz
— Polimer News (@polimernews) June 7, 2020
Comments