பிரீமியர் லீக் ஜூன் 17- ந் தேதி தொடக்கம்... 30 ஆண்டுகளுக்கு பிறகு, பட்டம் வெல்லும் முனைப்பில் லிவர்பூல்!

0 2561

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் 2019 - 20 சீசனுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான மற்றோரு ஐரோப்பிய நாடானா ஜெர்மனியில் பந்தஸ்லீகா தொடர் சில நாள்களுக்கு முன் தொடங்கியது. போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து,  ஜெர்மனி பாணியை  பின்பற்றி, பிரீமியர் லீக் தொடரை நடத்த எப்.ஏ முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு , பிரீமியர் லீக் போட்டிகள் ஜூன் 17- ந் தேதி தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் ஷெர்ஃபீல்ட் யுனைடெட் அணி ஆஸ்டன் வில்லா அணியை எதிர்கொள்கிறது. 18- ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணி ஆர்சனல் அணியை சந்திக்கிறது.

தற்போது, புள்ளிகள் பட்டியலில் 29 ஆட்டங்களில் விளையாடி 82 புள்ளிகளை ஈட்டியுள்ள லிவர்பூல் அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்திலுள்ள மான்செஸ்டர் சிட்டி அணி 57 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால் , இந்த முறை லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் பெறுவது உறுதியாகிள்ளது. சாம்பியன் பட்டம் பெற லிவர்பூல் அணிக்கு இன்னும் 6 புள்ளிகளே தேவை. இதனால், எஞ்சியுள்ள இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் போதுமானது.

இதற்கு முன்னதாக, கடந்த 1989- 90 ம் ஆண்டில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரீமியர்லீக் கோப்பையை கைப்பற்ற ஆவலுடன் காத்திருக்கிறது லிவர்பூல் அணி. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments