விடிய விடிய பப்ஜி விளையாடிய மாணவன் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை

0 15366

ராஜஸ்தானில் இரவில் நீண்ட நேரம் பப்ஜி விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள காந்தி காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரின் 14 வயது மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.

பப்ஜி விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட அந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அந்த விளையாட்டை தனது தாயின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளான்.

நேற்று முன்தினம் இரவு பப்ஜி விளையாட்டினை கண்மூடித்தனமாக விளையாடியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவும் விளையாடிய சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தான்.

விடிய விடிய பப்ஜி விளையாடியதால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கோட்டா ரயில்வே காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments