ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் 25 வயது அப்பாவி இளைஞர் உயிரிழப்பு

0 1228

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் கிராமவாசியான 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

எல்லையில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடந்த சில நாட்களாக கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எல்லையருகே உள்ள கிராமங்களில் மக்களை மிரட்டி தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சோபோர் மாவட்டத்தில் உள்ள போமை என்ற கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள் சிலர் தனிஷ் மன்சூர் என்ற 25 வயது இளைஞர் ஒருவரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.

அவர் அப்பகுதியில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளைஞரை குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments