சிறப்பு ரயில்கள் பல மணி நேரம் தாமதம் குறித்து குவியும் புகார்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் 230 சிறப்பு ரயில்கள் நூறு சதவீதம் சரியான நேரத்தை கடைபிடிக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் சிறப்பு ரயில்கள் குறித்த நேரத்தில் பயணம் மேற்கொள்வதை 100 சதவீதம் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பீகார் சென்ற சிறப்பு ரயில் கிட்டதட்ட 50 மணி நேரம் நெடும் பயணம் மேற்கொண்டது. சுமார் எட்டு மணி நேரம் தாமதமாக அந்த ரயில் இலக்கை சென்றடைந்தது. இதே போல் மும்பையிலும் பல மணி நேரமாக ரயில் தாமதமானதால் ஆயிரக்கணக்கானோர் ரயில்நிலையங்களில் காத்துக் கிடந்தனர்.
இத்தகைய சூழலைத் தவிர்ப்பதற்காக அனைத்து ரயில்களும் அறிவிக்கப்பட்ட நேரத்தில் தாமதமின்றி பயணத்தைத் தொடங்கி உரிய நேரத்தில் இலக்கை சென்றடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments