கேரள யானையைப் போல் வெடிவைத்த உணவால் படுகாயமடைந்த பசுமாடு
கேரள மாநிலம் பாலக்காட்டில் கர்ப்பிணி யானைக்கு வெடிவைத்த தேங்காயை கொடுத்து கொன்ற கொடூர சம்பவத்தைப் போல் இமாச்சலப் பிரதேசத்தில் வெடிவைத்த மாவு உருண்டையை தின்ற மாடு ஒன்று தாடை வெடித்து படுகாயம் அடைந்துள்ளது.
பிலாஸ்புர் மாவட்டத்தில் கர்ப்பிணியான பசுமாடு ஒன்று படுகாயம் அடைந்ததையடுத்து அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் இது தொடர்பாக நந்தலால் என்ற நபரை கைது செய்துள்ளனர். காயம் அடைந்த பசு மாட்டுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
Comments