நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் கனடா பிரதமர் பங்கேற்பு
கனடாவில் நடந்த நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர், அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்டவருக்கு முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தினார். தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற பேரணியில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார்.
பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஜஸ்டின் ட்ரூடோ பேரணியில் இணைந்து நடந்து வந்தார். இது அனைவரையும் ஆச்சரியம் அடையச் செய்தது.
அவருடன் சோமாலிய வம்சாவளி அமைச்சரான அகமது உசேனும் பங்கேற்றார். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முழங்காலிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார்.
Comments