10 - ஆவது வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளுக்காக 104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
10 - ஆவது வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளுக்காக சென்னையில், 99 வழித்தடங்களில், 104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
எந்தெந்த வழித்தடங்களில், எத்தனை மணிக்கு பேருந்து புறப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. வருகிற 15 ம் தேதி துவங் கும் 10 - வது வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 70 ஆயிரம் மாணவ - மாணவிகள் பங்கேற்கிறார்கள்.
இவர்களுக்காக 12 ஆயிரத்து 690 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
பொதுத்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவிகளுக்கும் ஆசிரியர் - ஆசிரியைகளுக்கும் முக கவசம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.
Comments