சச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங் '

0 5592
சச்சின், வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம், தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பார்த்த சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் சச்சினை விட இன்சமாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.

வாசிக் அக்ரம் பட்டியலின்படி , வெஸ்ட் இண்டிஸ் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில் உள்ளார். 1974- ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக விளையாடிய விவியன் ரிச்சர்ட்ஸின் சரசாரி டெஸ்ட்டில் 50.24 , ஒருநாள் போட்டியில் 47 ஆகும். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோ உள்ளார் . 1982- ம் ஆண்டு முதல் 1995- ம் ஆண்டு வரை நியூசிலாந்து அணிக்காக விளையாடிய இவர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தவர். மார்ட்டின் குரோவின் சராசரி டெஸ்ட் போட்டியில் 45.37 ஒருநாள் போட்டிகளில் 38.24 ஆகும்.

வெஸ்ட் இண்டிஸ் அணியின் இடது கை பேட்ஸ்மேன் பிரையன் லாரா , வாசிமின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். தனி ஆளாக போராடி பல முறை வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு வெற்றி தேடி கொடுத்தவர் லாரா. டெஸ்ட் போட்டியில் 11953 ரன்களும் ஒருநாள் போட்டியில் 10405 ரன்களும் எடுத்தவர். டெஸ்ட் போட்டியில் இவரின் சராசரி 52.89 ஒரு நாள் போட்டியில் 40.17 ஆகும். இரு ஃபார்மட் போட்டிகளிலும் 10,000 ரன்களை கடந்த ஒரு சில கிரிக்கெட்டர்களில் லாராவும் ஒருவர்.

பாகிஸ்தான் அணிக்காக தன்னுடன் இணைந்து நீண்ட காலம் விளையாடிய இன்சமாம் உல் ஹக்கை நான்காவது சிறந்த பேட்ஸ்மேனாக  அக்ரம் தேர்வு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8830 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 11739 ரன்களையும் இன்சமாம் எடுத்துள்ளார். இரு ஃபார்மட்களிலும் சேர்த்து 20000 ரன்களை இன்சமாம் குவித்துள்ளார்.

அக்ரமின் பார்வையில், இந்திய பேட்டிங் மேஸ்ட்ரோ சச்சினுக்கு இன்சமாமுக்கு அடுத்த இடமே கிடைத்துள்ளது . டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ள சச்சின், பல முறை வாசிம் அக்ரம் பந்துவீச்சை துவம்சம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments