ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவடிக்கை-தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச் சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்-லைன் வகுப்புகளில் இருந்து மாணவ,மாணவிகளை நீக்கினாலும் நடவடிக்கை பாயும் என்றார்.
பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக 18 பேர் கொண்ட குழுவினர், ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
கொரோனா பாதிப்பு பகுதிகளில் வசிக் கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவி யர்களை வேன் மூலம் அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுத வைக்கப் படுவர் என அவர் குறிப்பிட்டார். 10,11 மற்றும் 12 - ம் வகுப்புகளுக் கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் இறுதிக்குள் வெளி யிடப்படும் என்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரி வித்தார்.
ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவடிக்கை-தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை #PrivateSchools | #MinisterSengottaiyan https://t.co/Fxm3tS7rnG
— Polimer News (@polimernews) June 6, 2020
Comments