திரைப்படங்களின் நேரடி ஆன்லைன் ரிலீஸ் தொடர்ந்தால் சினிமா துறைக்கு உகந்ததாக இருக்காது - அமைச்சர்
திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடும் நடைமுறை தொடர்ந்தால் சினிமா துறைக்கு உகந்ததாக இருக்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படத்துறையின் 100-ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைன் மூலம் நேரடியாக திரையிடப்பட்டது இதுவே முதன்முறை என்றும் இது தற்போதைய சூழலில் மட்டுமே வரவேற்கத் தக்கது என்றும் கூறினார்.
முன்னதாக அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையிலான எலக்ட்ரோகெமிலுமினசென்ஸ் என்ற தானியங்கி பரிசோதனை உபகரணத்தை தொடங்கி வைத்தார்.
திரைப்படங்களின் நேரடி ஆன்லைன் ரிலீஸ் தொடர்ந்தால் சினிமா துறைக்கு உகந்ததாக இருக்காது - அமைச்சர் #MinisterKadamburRaju | #Movies | #Cinema https://t.co/tR4iZmYpOT
— Polimer News (@polimernews) June 6, 2020
Comments