சலூன் கடைக்காரர் மகள் மாணவி நேத்ராவின் உயர்கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் - முதலமைச்சர்

0 7553

பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற, மதுரை மேலமடை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவின் உயர்கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழக மக்கள் சார்பாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments