யானையை மரணத்திற்கு தள்ளியது வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காய் -விசாரணையில் தகவல்
கேரள மாநிலம் பாலக்காட்டு மாவட்டத்தில், கருவுற்ற காட்டு யானையை மரணத்திற்கு தள்ளியது, வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காய் என விசாரணைக்குப் பிறகு தெரியவந்துள்ளது.
வெடிமருந்துகள் கலந்த அன்னாசிப் பழத்தை உணவாகக் கொடுத்ததால், வெடித்துச் சிதறி, வாயில் படுகாயங்கள் ஏற்பட்டு யானை உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில், ரப்பர் தோட்ட தொழிலாளி வில்சன் என்பவரை கைது செய்துள்ள வனத்துறையினர், தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல, அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து கலக்கப்படவில்லை என்றும், தேங்காயில் வெடிபொருளை வைத்ததே துயரச் சம்பவத்திற்கு காரணம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments