கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை முடியுமா?
இந்தியாவிடம் அடிக்கடி வம்பு இழுத்து வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்' ரிமூவ் சைனா ஆப்ஸ்' என்ற பெயரில் புதிய ஆஃப் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த ஆஃப்புக்கு இந்தியர்களிடையே கடும் வரவேற்பு உருவானது . ஆஃப் வெளியான சில நாள்களிலேயே ஏராளமானோர் டௌன்லோடு செய்தனர். இந்த ஆஃப்பை கொண்டு சீன ஆஃப்புகளையும் டெலிட் செய்து வந்தனர்.
இதற்கிடையே, தங்கள் கொள்கைக்கு விரோதமானது என்று கூறி, ஜுன் 2- ந் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ரிமூவ் சைனா ஆப் நீக்கப்பட்டது. அதோடு, சேர்த்து சீன டிக்டாக் செயலிக்கு பதிலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மித்ரன் செயலிலையும் கூகுள் நீக்கி விட்டது. கூகுள் விதிகளின்படி, ஒரு ஆஃப் மற்றோரு ஆஃப்பினை காப்பியடித்து உருவாக்கக் கூடாது. ஒரு ஆஃப்பை பார்க்கும் போது மற்றோரு ஆஃப்பை நினைவு படுத்தும் வகையில் இருக்கவும் கூடாது. மித்ரன் ஆஃப் சீனாவின் டிக் டாக் ஆஃப் போல இருப்பதாக கூகுள் காரணம் கூறியது.
கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இந்தியாவில் ஆஃப்புகளை நீக்கும் செயல்கள் எங்கள் கவனத்தை பெற்றன. எங்கள் தரப்பு செயல்பாடுகளை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதன்படி, தொழில்நுட்ப கொள்கைகளை விதிகளை மீறிய ஆஃப்புகள் நீக்கப்பட்டுள்ளன. ஆஃப்புகளை உருவாக்குபவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை சரி செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகளையும் தெளிவுடுத்தியுள்ளோம். இந்த சிக்கல்கள் தீர்ந்தவுடன் மீண்டும் ஆஃப்புகள் பயன்பாட்டுக்கு வரலாம் '' என்று அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் சில மாற்றங்களை செய்யப்பட்ட பிறகு, மித்ரன் ஆஃப் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டுள்ளது. ரூர்க்கி ஐ.ஐ.டி யில் படித்து வரும் ஷிவாங் அகர்வால் என்ற மாணவரின் கண்டுபிடிப்புதான் மித்ரன் ஆஃப். இதற்கான சோர்ஸ் கோடை லாகூரைச் சேர்ந்த Qboxus நிறுவனத்திடமிருந்து ஷிவாங்க் அகர்வால் ரூ. 2,500 - க்கு வாங்கியுள்ளார். டிக்டிக் என்ற பெயரில் சோர்ஸ் கோடு வாங்கப்பட்டு இந்தியாவில் மித்ரன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளதாக ஷிவாங் அகர்வால் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால், பாகிஸ்தான் ஆஃப் என்றும் மித்ரன் இந்திய தயாரிப்பு கிடையாது என்கிற விமர்சனமும் எழுந்தது.
Comments