அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு சென்று கேட்டறிந்த ஸ்டாலின்

0 1519

கொரோனா பாதிப்புடன் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ள, மருத்துவமனைக்கு நேரில் வந்த அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையிலுள்ள ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில், அங்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின், மருத்துவர்களிடம் அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவரது உடல்நலம் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments