சர்க்கரை விலையைக் கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த அரசு பரிசீலனை
சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையைக் கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த அரசு பரிசீலித்து வரும் நிலையில், 6 ரூபாய் உயர்த்த வேண்டும் எனச் சர்க்கரை ஆலைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கரும்பு கொள்முதல் செய்ததற்காகச் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. இந்தத் தொகையைச் செலுத்த ஏதுவாகச் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையைக் கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்தி 33ரூபாயாக ஆக்கலாம் என அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்திருந்தது.
இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வரும் நிலையில், சர்க்கரை விலையைக் கிலோவுக்கு 6 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் எனச் சர்க்கரை ஆலைகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
சர்க்கரையின் அளவில் 65 விழுக்காட்டை உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர், குளிர்பானத் தயாரிப்பாளர் ஆகியோரே மொத்தமாகக் கொள்முதல் செய்வதால் இந்த விலை உயர்வு நுகர்வோரைப் பாதிக்காது என்றும் சர்க்கரை ஆலைகள் தெரிவித்துள்ளன.
Comments