பீகாரில் சட்டமன்ற தேர்தலை, கொரோனா முன்னெச்சரிக்கையுடன் நடத்த திட்டம்
பீகாரில் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை, கொரோனா முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து நடைபெற உள்ள தேர்தலில் வாக்காளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் எனும் எண்ணிக்கையை 500 ஆக குறைத்து, சுமார் 7 கோடி வாக்காளர்களைக் கொண்ட பீகாரில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளை அமைக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments