ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்த வெண்ணிற சந்திரன்
இந்தியாவில் இன்று அதிகாலை ஸ்ட்ராபெரி மூன் எனப்படும் பகுதியளவு சந்திரகிரகணம் ஏற்பட்டது. சூரியன் பூமி சந்திரன் நேர்கோட்டில் அமைவதால் சூரியனின் நிழல் பூமி இடையில் இருப்பதால் நிலவின் மீது படாது அதனால் இந்த சந்திர கிரகணம் உருவாகிறது.
நேற்று இரவு 11.15 மணி முதல் இன்று அதிகாலை 2.35 மணி வரை சந்திரகிரகணம் ஏற்பட்டது. ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் இந்த கிரகணம் தெரிந்தது.
இதனை ஏராளமானோர் வெற்றுக் கண்களால் பார்த்து ரசித்தனர். அபுதாபி, ஓமன் உள்ளிட்ட பகுதியிலும் மிகப்பெரிய அளவில் நிலவு தெரிந்ததால் ஏராளமானோர் அதனைப் பார்த்தனர்.
அனல் ககிரகணம் ஏற்பட்ட போது, சந்திரன் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்ததால், இது ஸ்ட்ராபெரி மூன் என்றும், இந்தாண்டு மட்டும் 4 சந்திர கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments