தொழிலாளர்கள் இல்லாமல் தள்ளாடும் ஜவுளிக் கடைகள், ஆலைகள்
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஜவுளி ஆலைகள், சந்தைகள் திறக்கப்பட்டுள்ள போதும் வேலைக்கு ஆள்கிடைக்காததால் சந்தைகள் களையிழந்து காணப்படுகின்றன. ஊரடங்குக் காலத்தில் சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று விட்டனர்.
அவர்கள் திரும்பி வருவதற்கான போக்குவரத்து தொடங்கப்படவில்லை. மேலும் திரும்பி வரும் தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பலர் திரும்பி வருவதற்கு அஞ்சுகின்றனர்.
இதனால் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று ஜவுளி வியாபாரிகள் கோருகின்றனர். தொழிலாளர்கள் இல்லாமல் எப்படி தொழில் செய்வது என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Comments