எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்

0 12966

ஜம்மு அருகே இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த மதியழகன் என்ற ராணுவவீரர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடிக்குட்பட்ட சித்தூர் ஊராட்சி வெத்தலைகாரன் காடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன் கடந்த 1999 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து (ஹவில்தாராக)பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை இந்தியா பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர் சுந்தரபாணியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றதாகவும், இதில் குண்டு பாய்ந்து மதியழகன் இறந்துவிட்டதாக நேற்று இரவு 9 மணி அளவில் அவரது மனைவி தமிழரசிக்கு இராணுவ அதிகாரிகள் தகவலை தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த மதியழகனின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments