நம்பிக்கை இழக்கும் நுகர்வோர்கள்..!
கொரோனா தொற்று காரணமாக, நாட்டின் பொருளாதார நிலவரம் மற்றும் தங்களது நிதி நிலைமை குறித்த நுகர்வோரின் நம்பிக்கை, வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சீர்குலைந்து விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சென்னை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட 13 நகரங்களைச் சேர்ந்த 5,761 குடும்பங்களில், கடந்த 5 முதல் 17 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி நடத்திய தொலைபேசி ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
வரும் ஆண்டுக்கான குறியீடுகளும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு, வீட்டு வருமானம், பொதுவான பொருளாதாரம் உள்ளிட்டவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என நுகர்வோர் கருதுவதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் விலை உயரும் என பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், பொதுவான விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தையும் பலர் பதிவு செய்துள்ளனர்.
நம்பிக்கை இழக்கும் நுகர்வோர்கள்..! #RBI | #Consumers https://t.co/dAUeuGrNsN
— Polimer News (@polimernews) June 5, 2020
Comments