ஆழியாறு, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
ஆழியாறு மற்றும் பவனிசாகர் அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக வரும் 7ஆம் தேதி முதல் அக்டோபர் இறுதி வரை 146 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து ஆயிரத்து 156 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடவும், இதன் மூலம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, கொடிவேரி பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து வருகிற 15-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு 241 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments