சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க இன்று முதல் கூடுதலாக 1000 டாக்டர்கள்
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பட்ட மேற்படிப்பு முடித்த ஆயிரம் மருத்துவர்களை இன்று முதல் பணியில் ஈடுபட மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நாளுக்குள் நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், மருத்துவர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பி.ஜி. மருத்துவம் படித்தவர்களை தேர்வு செய்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த திட்டமிடப்பட்டது.
அந்த வகையில், இன்று முதல் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் தங்களுக்கான மருத்துவமனைகளில் சென்று வருகையை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள், அடுத்த 2 மாதத்திற்கு கொரோனா சிகிச்சை வார்டுகளில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க இன்று முதல் கூடுதலாக 1000 டாக்டர்கள் #Chennai | #Doctors | #Covid19 https://t.co/Kio4AcfMS3
— Polimer News (@polimernews) June 5, 2020
Comments