IPL கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்கு இந்தியக் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டது. 2014ஆம் ஆண்டு, முதல் 20 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் எஞ்சிய ஆட்டங்கள் இந்தியாவிலும் நடைபெற்றன.
IPL கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம் #IPL | #BCCI https://t.co/0cEJH0fxNL
— Polimer News (@polimernews) June 5, 2020
Comments