ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபியின் முபாதலா நிறுவனம் ரூ. 9093 கோடி முதலீடு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் அபுதாபியைச் சேர்ந்த முபாதலா நிறுவனம் ஒன்பதாயிரத்து 93 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.
அமேசான் நிறுவனத்திடம் முதலீட்டைப் பெற ஏர்டெல் நிறுவனமும் கூகுளிடம் முதலீட்டைப் பெற வோடபோன் நிறுவனமும் பேச்சு நடத்தி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஏற்கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர் ஆகிய 5 நிறுவனங்களிடம் முதலீட்டை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனான முபாதலா,ரிலையன்ஸ் ஜியோவில் ஒன்பதாயிரத்து 93 கோடி ரூபாயை முதலீடு செய்து அதன் ஒன்று புள்ளி எட்டு ஐந்து விழுக்காடு பங்குகளை வாங்க உள்ளது.
இத்துடன் சேர்த்து ஜியோ நிறுவனம் கடந்த 6 வாரங்களில் 6 நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 87 ஆயிரத்து 655 கோடி ரூபாயை முதலீடாக ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments