இந்தி திரைப்பட இயக்குனர் பாசு சட்டர்ஜி காலமானார்

0 1592

பிரபல பாலிவுட் இயக்குனர் பாசு சட்டர்ஜி வயதின் மூப்பு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 93. ரஜினிகந்தா, சிட்சோர், சோட்டி சி பாத் போன்ற படங்களை இயக்கிய பாசு சட்டர்ஜி தமது படங்களில் கே.ஜே.யேசுதாசுக்கு பாடும் வாய்ப்புகளை வழங்கினார்.

Blitz ஆங்கில வார இதழுக்கு ஓவியங்கள் வரைபவராக வாழ்க்கையைத் தொடங்கிய பாசு சட்டர்ஜி ஏராளமான படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். வங்காள திரையுலகிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் புகழ் பெற்றிருந்தார். பாசு சட்டர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், ஆமிர் கான், லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோர் பாசு சட்டர்ஜியுடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில் பாசு சட்டர்ஜியின் திரைப்படங்கள் அபாரமானவை என்றும் மிகவும் நுட்பமான உணர்வுகள் கொண்டவை என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments