10-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நோய்த்தொற்று 2 தினங்களுக்கு மூடப்படும் சுகாதாரத்துறை அமைச்சரக அலுவலகம்
டெல்லியில் உள்ள மத்திய சுகாதரத்துறை அமைச்சரவையின் அலுவலகம் கொரோனா முன்னெச்சரிக்கையாக, கிருமி நாசினி தெளிப்பதற்காக இரண்டு நாட்களுக்கு மூடப்படுகிறது.
நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களில் நிர்மல் பவன் கட்டிடத்தில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் பனியாற்றி வரும், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அந்த கட்டிடத்தில் உள்ள சுகதாரத்துறை அலுவலகம் மட்டுமின்றி, ஆற்றல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட வேறு சில அமைச்சரவை அலுவலகங்களும் மூடப்பட்டுளளது.
10-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நோய்த்தொற்று 2 தினங்களுக்கு மூடப்படும் சுகாதாரத்துறை அமைச்சரக அலுவலகம் #COVID19India https://t.co/QfJW00dEeQ
— Polimer News (@polimernews) June 5, 2020
Comments