ரஜினிக்கு கொரோனா என ஜோக்கடித்த பாலிவுட் நடிகர்.. சமூக ஊடகங்களில் துவம்சம் செய்த ரசிகர்கள்

0 2898

நடிகர் ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாசிட்டிவ் என்று இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டதற்கு ரஜினியின் ரசிகர்கள் பாலிவுட் நடிகர் ரோகித் ராயை உண்டு இல்லை என்று சமூக ஊடகங்களில் துவம்சம் பண்ணிவிட்டனர்.

ரஜினிக்கு கொரோனா பாஸிட்டிவ் என்பதால் இனிமேல் கொரோனாவே குவாரண்டைன் ஆகி விடும் என்று ரோகித் ராய் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் பின்வாங்கிய நடிகர் ரோகித் ராய் ஒரு ஜோக்கை ஜோக்காக எடுத்துக் கொள்ளுங்களேன் என்று கூறினார். ரஜினி பற்றி பாலிவுட்டில் பலவகையான ஜோக்குகள் பிரபலம் என்றும், ஜோக்காகத்தான் பதிவிட்டதாகவும் ரோகித் ராய் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments