தடுப்பூசி தயாரிக்கும் சர்வதேசஅமைப்புக்கு இந்தியா 15 மில்லியன் டாலர் நிதியுதவி
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" அடுத்த 5 ஆண்டுகளில் 15 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருங்கிணைத்த உலகளாவிய மருத்துவ மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், ஐநா.குழுக்கள் உள்ளிட்டோர் இணைய வழியாக பங்கேற்றனர்.
இதில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா துணைநிற்கும் என்றார். GAVI என்ற இந்த அமைப்பு உலக நாடுகளின் ஒற்றுமையுணர்வுக்கு அடையாளம் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
உயிர்காக்கும் மருந்துகள், கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு தடுப்பூசிகள் போன்றவை தயாரிக்க இந்த அமைப்பு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உலக நாடுகள் யாவும் ஒரே பொது எதிரியுடன் தற்போது போராடி வருவதாக தெரிவித்த மோடி, இந்தியாவில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு நோய்கள் பரவாமல் இருக்க தமது அரசு இந்திர தனுஷ் என்ற தடுப்பூசிகளைப் போடும் திட்டத்தை அமல்படுத்தி வருவது குறித்தும் விளக்கினார்.
Addressed #GVS2020. This is a commendable effort to bring together various stakeholders and work to eliminate COVID-19. @gavi is a symbol of global solidarity and it reminds us that by helping others we are also helping ourselves. https://t.co/eg1hk7C6IY
— Narendra Modi (@narendramodi) June 4, 2020
Comments