ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.14,000 கோடி முதலீடு செய்ய அமேசான் திட்டம்
தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லில், 14 ஆயிரம் கோடி ரூபாயை அமேசான் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் காரணமாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்து வரும் ஜியோவில், வெளிநாட்டு நிறுவனங்கள் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தன.
இந்நிலையில், தற்போது அமேசான் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு இடையே தொடங்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உறுதியானால், ஏர்டெல் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனம் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments