இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு
6 நாட்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. கடந்த 6 நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 3 ஆயிரத்து 500 புள்ளிகள் வரை 11 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 128 புள்ளிகள் குறைந்து, 34 ஆயிரத்திற்கு கீழே இறங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 32 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 29ல் நிலை கொண்டது.
வங்கி, நிதி நிறுவன பங்குகள் விலை சரிவடைந்த நிலையில், ஐடி, மருந்து, உலோக துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது.
அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து 75 ரூபாய் 56 காசுகளாக இருந்தது.
Comments