பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு எதிரொலியாக ஸ்மார்ட் போன்கள் விற்பனை அதிகரிப்பு
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளதால், செல்போன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக லேப்டாப்புகளை வாங்கினால் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ரூபாய் செலவாகும் நிலையில், 5 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ரூபாய்க்குள் பல்வேறு வசதிகளுடன் கிடைக்கும் செல்போன்களை வாங்க பெற்றோர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் தற்போது சீனாவிலிருந்து செல்போன்கள் வருவது தடைபட்டுள்ளதால், இந்திய தயாரிப்பு ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரித்துள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து பலரும் செல்போன் வாங்கி செல்வதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments