படைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு

0 3107


இந்திய படைத் தளவாட கருவி உற்பத்தி தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 82,000 ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியாவில் 41 ராணுவத் தளவாட  உற்பத்தி தொழிற்சாலைகள் உ.ள்ளன. இந்த தொழிற்சாலைகள் ஆர்டன்ஸ் ஃபேக்டரி போர்டு என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக முடங்கிய இந்திய ‘பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ரூ. 20 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதற்கான திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , '' படைத்தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளிலும் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும். உற்பத்தி திறன் மற்றும் செயல்திறனை அதிகிரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படைத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் வகையில் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக மாற்றப்படும் '' என்று கூறியிருந்தார்.

படைத்தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை கார்ப்பரேட் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு  ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அகில இந்திய பாதுகாப்புபடை ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கம் மற்றும் பிரதீக்ஷா மஸ்தூர் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன.அதில், எங்களுடன் அரசு  செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை  மீறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் காலத்தில் கூ‘ட படைத்தளவாட கருவி தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவில்லை. மருத்துவர்களுக்கு தேவையான பி.பி.ஈ எனப்படும் பாதுகாப்பு உடைகளை தயாரிப்பதில் எங்கள் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் பணியில் ஈடுபட்டுள்ள 82,000 ஊழியர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அரசு நடந்து கொண்டுள்ளது. அரசு எடுத்துள்ள முடிவு தன்னிச்சையான தொழிலாளர்கள் விரோத போக்கு கொண்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய பாதுகாப்புபடை ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் சி. ஸ்ரீகுமார் கூறுகையில், '' இதற்கு முன் ஜார்ஜ் பெர்னான்டஸ், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி, மனோகர் பாரிக்கர் ஆகியோர் பாதுகாப்புத்துறை அமைச்சர்களாக இருந்த போது, ' படைத்தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் ஒரு போதும் தனியார்மயமாக்கப்படாது'என்று எங்களுக்கு உறுதி மொழி எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளனர். அப்படியிருக்கையில், மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது '' என்று தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments