யானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு

0 4500

கேரளாவில் பழத்திற்குள் பட்டாசுகளை மறைத்து வைத்து கொடுத்து கர்ப்பம் தரித்த யானையின் உயிரிழப்புக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என  மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மலப்புரத்தில் காட்டில் இருந்து உணவு தேடி வந்த கர்ப்பம் தரித்த யானைக்கு பைனாப்பிள் பழத்துக்குள் பட்டாசுகளை மறைத்து வைத்து மர்ம நபர்கள் அளித்துள்ளனர்.

அதை யானை தின்றபோது பட்டாசு வெடித்ததால் வாயில் பலத்த காயமடைந்து சுற்றி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து கேரள அரசிடம் பிரகாஷ் ஜவடேகர் அறிக்கை கோரியுள்ளார்.

அச்சம்பவத்தில் தொடர்புடையோர் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments