கொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..! மூச்சுத்திணறலை சமாளிக்கலாம்

0 2995

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க, தலைக்குப்புறப் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கும் புதிய முறையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கு மேல் உள்ள நபருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுறது.

கொரோனா பதிப்புக்குள்ளானவர்கள் பெரும்பாலும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்படும் நிலையில், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான சுவாசக்கோளாறு உள்ள நபர்களுக்கு முன்கூட்டியே தற்காத்துக் கொள்ளும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று மூச்சுத்திணறல் ஏற்படும் ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு மூச்சுப்பயிற்சி மூலம் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மல்லாக்க படுத்துத் தூங்குவதை நம்மில் பலர் வழக்கமாக வைத்திருபோம். அப்போது நுரையீரல் பின்பக்கப் பகுதியானது சுவாசம் தடைபட்டு முழுமையான சுவாசம் பெற இயலாத நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், மனிதனுக்கு 99 சதவீத ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில், 90 சதவீதத்திற்கும் குறைவாகக் கிடைப்பதால் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் வரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகள் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை குப்புறப்படுத்து தூங்குவதும், இடது மற்றும் வலது புறம் ஒருக்களித்து படுத்து தூங்குவதும், அவர்களை மூச்சுத்திணறலில் இருந்து காப்பாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது.

அதே போல சென்னையை பொறுத்தவரை சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் , டயாலிசிஸ் செய்துவரும் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இருதய நோய், சிறுநீரக பிரச்சனை, ரத்த அழுத்தம், நீரழிவு நோயாளிகளை கொரோனா தொற்றிக்கொண்டால் அவர்களது முக்கிய உறுப்புகள் செயல் இழந்து உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எனவே மேற்கண்ட நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்துக் கொண்டால் கொரோனா பாதிப்பில் இருந்து எளிதில் விடுபடலம் என்கின்றனர் மருத்துவர்கள்.

டயாலிசிஸ் நோயாளிகள் 102 வாகனத்தை அழைத்தால் போதும் அவர்களே வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பக் கொண்டுவந்து விடுவார்கள். மேலும் இருதய நோய், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவர் ஆலோசனை படி கொடுக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வது அவசியம்.

கொரோனா பரவாமல் இருக்க நம்மால் முடிந்த சமுதாய பங்களிப்பை ஒவ்வொருவரும் செய்தால் கொரோனா பரவலை எளிதாக தடுத்து விடலாம், தனித்திருப்போம், கொரோனாவை தடுத்திடுவோம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments