பிபிஇ கிட் அணிவதால் ஏற்படும் சங்கடங்களை போக்க புதிய கருவி
பிபிஇ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிவதால் ஏற்படும் சங்கடங்களை போக்கும் நோக்கில், டிஆர்டிஒ அமைப்பனது புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளது.
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு கொள்ளும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர், நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகத்துக் கொள்ள உடல்முழுவதையும் மறைக்கும் பிபிஇ கிட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், அவற்றை அணிந்த சில நிமிடங்களிலேயே வியர்வை கொட்டுவதால் அவற்றை அணிந்து பணி புரிவதை பலரும் சங்கடமாக உணருகின்றனர்.
இந்நிலையில், டிஆர்டிஓ அமைப்பானது சுமேரு பேக்ஸ் (SUMERU-PACS) என்ற பெயரில் உடலோடு சேர்த்து அணிந்து கொள்ளும் வகையில் 500 கிராம் எடையுள்ள கருவி ஒன்றை வடிவமைத்துள்ளது. இதில் உள்ள (filters) பில்டர்கள் மூலம் தூய்மையான காற்று உள்ளே உறிஞ்சப்பட்டு, பிபிஇ கிட் அணிந்து இருந்தாலும் உடல் வெப்பநிலை சீராக வைக்கப்பட்டு வியர்வை வெளியேறுவதை தடுக்கப்படுகிறது.
Comments