வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் வேதிப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தாகேஜ் என்னுமிடத்தில் உள்ள தனியார் வேதிப்பொருள் தொழிற்சாலையில் நேற்று திடீரெனக் கொதிகலன் வெடித்ததில், ஏற்பட்ட தீ மளமளவெனப் பரவி வானில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால், காற்றில் வேதிப்பொருட்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆலையின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Comments