முன்பதிவு டிக்கெட்டுகளின் கட்டணத் தொகையான ரூ.1,885 கோடி திருப்பி வழங்கப்பட்டது-ரயில்வே நிர்வாகம்
ஊரடங்கு சமயத்தில் ரத்து செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளின் கட்டணத் தொகையான , ஆயிரத்து 885 கோடி ரூபாய் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டு உள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, பயணிகள் ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. அந்த வகையில், கடந்த மார்ச் 21ந் தேதி முதல் மே 31ம் தேதி வரையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்வதற்காக ஆன்லைனில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
Indian Railways has refunded Rs 1885 Crores towards cancellation of tickets to passengers during the period 21st March 2020 to 31st May, 2020 on tickets booked through the online mode. pic.twitter.com/cxzB6xmIJT
— ANI (@ANI) June 3, 2020
Comments