"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு.!
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை வன்முறையாளர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
கருப்பின மக்களுக்கு எதிரான நிறவெறியைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காந்தி சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சிலையை உடைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கருப்பின மக்களுக்கு ஆதரவாக போராடி, தென்னாப்பிரிக்காவில் இன்றும் மரியாதையுடன் போற்றப்படுபவர் காந்தி என்பதுகூட தெரியாமல் அவரது சிலையை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
Mahatma Gandhi's statue outside the Indian Embassy in Washington DC desecrated during ongoing protests in the US . Probe is on.https://t.co/zwo1NbHfiS
— IndiaToday (@IndiaToday) June 4, 2020
Comments