நொய்டா அருகே நேற்றிரவு மிதமான நில அதிர்வு

0 1968

டெல்லியை அடுத்த நொய்டாவில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் நேற்றிரவு மிதமான நிலஅதிர்வு ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் இது 3 புள்ளி 2 ஆக பதிவானது.

இதனால் நொய்டாவின் கௌதம புத்தா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு ஓடினர். அண்மையில் டெல்லி -என்.சி.ஆர் பகுதிகளில் அடுத்தடுத்து மிதமான நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments