தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

0 2611

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும், 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 46வது தலைமை செயலாளராக கடந்த ஆண்டு ஜுன் மாதம் அவர் பொறுப்பேற்றார். வரும் ஜூலை 31ஆம் தேதியோடு அவரது பதவிக்காலம் முடிவடைய இருந்தது.

இந்த நிலையில், தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க கோரி கடந்த 15 ஆம் தேதி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது.

அதனை ஏற்று அக்டோபர் 31 ஆம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் புதிய தலைமை செயலாளரை நியமிப்பது சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments