அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருத்தங்கள்
ஒரே நாடு ஒரே சந்தை என்ற இலக்கின் ஒரு கட்டமாக அத்தியாவசிய பொருள்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தி-ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் செய்தியாளர்களிடம் விவரித்தார். இந்த சட்டதிருத்தத்தின் படி, தானியங்கள், எண்ணெய், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றுக்கு அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
இதனால் விவசாயிகள் இந்த பொருள்களை தாங்கள் விரும்பும் அளவுக்கு இருப்பு வைக்கவோ, ஏற்றுமதி செய்யவோ அனுமதி கிடைக்கும். மேலும் வேளாண் விளைபொருள் விலை கட்டுப்பாட்டு சட்டங்களில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைப்பதுடன், அவர்கள் விரும்பும் இடங்களில் விருப்பமான விலைக்கு விளைபொருள்களை விற்கவும் இதனால் முடியும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Comments