உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64.80 லட்சத்தை தாண்டியது

0 2138

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அறுபத்தி நாலு லட்சத்தி 80 ஆயிரத்தை (64.80 லட்சம்) தாண்டியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. உலகில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 3 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கொரோனா தொற்றிலிருந்து  30 லட்சத்து 89 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 80 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

2ம் இடத்திலுள்ள பிரேசிலில் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், 3ம் இடத்திலுள்ள ரஷ்யாவில் 4 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments